Economy, business and finance
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரம் எஸ்.பி.ஐ., வங்கி முன்பு அகில இந்திய யு.எப்.பி.யு., சார்பில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமை ஏற்றார். எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் சங்க மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி ஊழியர் சங்க பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். அனைத்து வங்கிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம் ஆனந்த் கூறுகையில்;
2024 ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐ.பி.ஏ., நிறுவனம் மற்றும் வங்கி ஊழியர் அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட யு.எப்.பி.யு., அமைப்பு நடத்திய இருதரப்பு பேச்சு வார்த்தை ஒப்பந்தத்தில் ஐந்து நாள் வேலை திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தியதை கண்டித்தும், வங்கி உயர் அதிகாரிகளுக்கு ஒழுங்கற்ற முறையில் பல மடங்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதை கண்டித்தும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
வேலை நிறுத்த போராட்டத்தால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மூடப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறை வேற்றாவிட்டால் செப். 28 முதல் 30 வரை வேலை நிறுத்தம் நடைபெறுவதோடு அக்டோபர் 26 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.