சிறுமியருக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டு சிறை
நாமக்கல்:ராசிபுரத்தில், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து,

சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, 20 ஆண்டு சிறை
தண்டனை விதித்து, நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாவட்டம், ராசிபுரம் அணைப்பாளையம் தேவேந்திரர் தெரு, கள்ளுக்கடை
மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 75. இவர் கடந்த, 2020 ஏப்., 1
முதல் அக்., 10 வரை உள்ள காலகட்டத்தில், 2 சிறுமியருக்கு பாலியல்
தொல்லை கொடுத்தார்.
பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா அளித்த புகாரின்படி, ராசிபுரம்
அனைத்து மகளிர் போலீசார், முத்துசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட மகளிர்
விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர்
சுகுணா ஆஜரானார்.
வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி எழில்
நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியருக்கு பாலியல் தொல்லை
கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், முத்துசாமிக்கு, 20 ஆண்டுகள்
கடுங்காவல் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து
தீர்ப்பளித்தார்.