Arts, culture, entertainment and media
நகராட்சி குப்பை லாரியில் மணல் கடத்தலா?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், குப்பை சேகரிக்கும் டிப்பர் லாரி ஒன்று வந்தது. அதை நிறுத்தி, போலீசார் சோதனை செய்ததில், ஆற்று மணல் இருந்தது.
இதுகுறித்து, அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் போலீசார் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன், கண்டமான அந்த டிப்பர் லாரியை, ராஜ்குமார், 42, என்பவர், ஏலத்தில் வாங்கி, பெயரை மாற்றாமல் மணல் அள்ளியது தெரிந்தது.
இதையடுத்து, அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.