Arts, culture, entertainment and media
இதே நாளில் அன்று
செப்டம்பர் 7, 1951கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சந்திரூரில், ஆடை மற்றும் அரிசி வியாபாரியான

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சந்திரூரில், ஆடை மற்றும் அரிசி வியாபாரியான இஸ்மாயில் - பாத்திமா தம்பதியின் மகனாக, 1951ல், இதே நாளில் பிறந்தவர், முகமது குட்டி பாணப்பரம்பில் இஸ்மாயில் எனும் மம்மூட்டி.
சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 1971ல், அனுபவங்கள் பாலிச்சகள் என்ற மலையாள திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்தார்.
கடந்த, 55 ஆண்டுகளாக, மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடிக்கிறார்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில், ரஜினியுடன் இணைந்து இவர் நடித்த, தளபதி, கே.பாலசந்தரின், அழகன், ராஜீவ் மேனனின், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், லிங்குசாமியின், ஆனந்தம், ஆர்.கே.செல்வமணியின், மக்களாட்சி, பாரதியின், மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நான்கு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை ஏழு முறையும், 'பிலிம்பேர்' விருதுகளை 14 முறையும் பெற்றார். மத்திய அரசின், 'பத்மஸ்ரீ, பத்மபூஷண்' விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு, இன்று 75வது பிறந்த தினம்!