Politics
மனைவிக்கு அமைச்சர் பதவி காங்., - எம்.பி., துக்காராம் முயற்சி
- நமது நிருபர் - மனைவி அன்னபூர்ணாவுக்கு அமைச்சர் பதவி பெற்று தர, காங்கிரஸ் எம்.பி., துக்காராம் முயற்சித்து

மனைவி அன்னபூர்ணாவுக்கு அமைச்சர் பதவி பெற்று தர, காங்கிரஸ் எம்.பி., துக்காராம் முயற்சித்து வருகிறார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை, கடந்த மாதம் 28ம் தேதி ராஜினாமா செய்தார். இதன்மூலம் அமைச்சரவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.
எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த நாகேந்திராவின் ராஜினாமாவால் காலியான அமைச்சர் இடத்தை அதே சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த பல்லாரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., துக்காராம், முன்னாள் அமைச்சர் ராஜண்ணா ஆகியோர், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை, டில்லியில் நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது சண்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான தனது மனைவி அன்னபூர்ணாவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று, துக்காராம் கோரிக்கை வைத்தார்.
எங்கள் குடும்பத்திற்கு அமைச்சர் பதவி தருவதாக கூறியதால் தான், லோக்சபா தேர்தலில் நின்றேன் என்றும், சுர்ஜேவாலாவிடம், அவர் கூறினார்.
அன்னபூர்ணாவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று, ராஜண்ணாவும் பரிந்துரை செய்தார்.
மேலும், கர்நாடகாவின் கூட்டுறவு வங்கி தலைவராக தன்னை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும், சுர்ஜேவாலாவிடம், ராஜண்ணா கோரிக்கை வைத்துள்ளார்.