கோத்தகிரிய தட்டி எடுத்த கனமழை மகிழ்ச்சியில் உள்ளூர் விவசாயிகள்
கோத்ததிரி: கோத்தகிரியில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோத்தகிரயில் நேற்று பிற்பகல், 2:30 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. குயர்ச்சியான காலநிலை நிலவியது. இதனால், பொதுமக்கள் பஸ் நிலையம் மற்றும் கடைகளில் தஞ்சம் அடைந்தனர். ஒரு வாரமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர் ஆதாரங்களில் தண்ணீர் வரத்து உயர்ந்து வருகிறது. விவசாய நிலங்களிலும் ஈரப்பதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
உரம் இட்டு பராமரிப்பு செய்திருந்த தேயிலை தோட்டங்களில் அரும்புகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. தண்ணீர் தட்டுபாடுக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது. மழையால், விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.