Arts, culture, entertainment and media
நீலகிரியில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
ஊட்டி: நீலகிரியில், 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
கல்வி சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அரசு சார்பில் . டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டில் கோத்தகிரி சக்கத்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை மல்லிகா குமார், கேர்கம்பை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆனந்தன், ஹில்போர்ட் மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் சப்னா, கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜ், தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பார்வதி, தொட்டண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ரேவதி, தேவர் சோலை கொட்டமேடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அன்பழகன், ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சசிகலா மற்றும் கல்லட்டி சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர் மாலதி ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், இன்று சென்னையில் பள்ளி கல்வி துறை சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் விருது பெறுகின்றனர். விருது பெறும் ஆசிரியர் , ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.