Environment
சுற்றுச்சூழல் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தல்
வால்பாறை: சுற்றுச்சூழல் மசோதாவை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா.கம்யூ.,கட்சி வலியுறுத்தியுள்ளது.
வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் மா.கம்யூ.,கட்சி சார்பில், மக்கள் சந்திப்பு இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் தாலுகா பொதுச்செயலாளர் பரமசிவம் பேசியதாவது:
கேரளா மாநில தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் தமிழகத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் தமிழக அரசு செய்துதர வேண்டும்.
எஸ்டேட் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள ரோட்டை சீரமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் உணர்வு திறன் மசோதாவை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். மனித - வன விலங்கு மோதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உ யர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.