மாரியம்மன் கோவிலில் ரூ.24 லட்சம் காணிக்கை
சேலம்:ஆடி பண்டிகையை ஒட்டி, சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், 8 தற்காலிக உண்டியல்கள்
பண்டிகையை ஒட்டி, சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், 8
தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. 10 நிரந்தர
உண்டியல்கள் உள்ளன.
மண்டல துணை கமிஷனர் ரமணிகந்தன் முன்னிலையில், 8 தற்காலிக
உண்டியல்கள், நிரந்தர உண்டியல்களில், 4 மட்டும் திறக்கப்பட்டன.
காணிக்கை எண்ணும் பணியில் அன்னபூர்ணா பொறியியல் கல்லுாரி நாட்டு
நலப்பணித்திட்ட மாணவர்கள், உழவார பணி பக்தர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல்களில், 9,95,230 ரூபாய், 4 நிரந்தர உண்டியல்களில்,
14,34,137 ரூபாய் என, 24,29,367 ரூபாய் இருந்தது. அத்துடன் தங்கம், 30
கிராம், வெள்ளி, 255 கிராம், அமெரிக்க, இந்தோனேஷியா உள்பட, 3
வெளிநாடு நோட்டுகள் இருந்தன. ஏற்பாடுகளை அறநிலையத்துறை ஆய்வர்
சசிகலா, செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள், அலுவலர்கள்
செய்திருந்தனர்.