சுற்றுலா - கிராம மக்களை சுரண்டக் கூடாது; வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும்!
சுற்றுலா சிறப்பு கருத்தரங்கில், சென்னை தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் நிறுவனர் பேசியது...
சென்னை தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் நிறுவனர் டெபோரா தியாகராஜன் - TNIE
ஒரு நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு ஆகியவை அருங்காட்சியகத்தின் மூலமாகவே வெளிப்படுகிறது என சென்னை தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் நிறுவனர் டெபோரா தியாகராஜன் பேசினார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று (செப். 15) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த கருத்தரங்கில் சென்னை தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் நிறுவனர் டெபோரா தியாகராஜன், "சுற்றுலாவின் வலிமை: கற்பனையை விரிவுபடுத்துதல்" என்ற தலைப்பில் பேசினார்.
"சுற்றுலா என்பது வெறும் பொருளாதார வளர்ச்சிக்கான கருவி மட்டுமல்ல. கலாசாரம், கலை, சமூகம் குறித்த மக்களின் புரிதலை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகவும் அமைகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் பாரம்பரியம் மிகுந்த அருங்காட்சியங்கள் இருக்கின்றன. இந்தியாவில் அரசு அருங்காட்சியகங்கள் மட்டுமின்றி, தனியார் அருங்காட்சியகங்களும் அதிகளவில் இருக்கின்றன.
ஒரு நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு ஆகியவை அருங்காட்சியகத்தின் மூலமாகவே வெளிப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. மிகச் சிறிய சமூகத்தை வெளிப்படுத்தும் அருங்காட்சியகங்களும் உள்ளன. நாகாலாந்தில் பழங்குடியின சமூகத்தைப் பற்றி சொல்லும் ஒரு அருங்காட்சியகம் உதாரணம்.
தமிழ்நாட்டில் 21 முக்கிய நகரங்கள் சுற்றுலாவுக்குரிய இடங்களாக உள்ளன. குழந்தைகளை அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
பல்வேறு வகையான சமூக மக்களை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள் அமைய வேண்டும்.
சுற்றுலா என்பது கிராம மக்களை சுரண்டுவதாக இருக்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அந்த வேலைவாய்ப்புகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்" என்று கூறினார்.
Tourism is Rural people must not be exploited; employment opportunities must be created
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.