Economy, business and finance
டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை கட்டண கழிப்பிடத்தில் அறிமுகம்
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள பொது கழிப்பிடத்தில், க்யூ ஆர் கோடு மூலம் பணம்
பஸ் ஸ்டாண்டில் அமைந்துள்ள பொது கழிப்பிடத்தில், க்யூ ஆர் கோடு மூலம்
பணம் செலுத்தும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாண்டில் கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. சேலம் கோட்ட
நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவுரையின்படி, நகராட்சியில்
செயல்படும் பஸ் ஸ்டாண்டில் உள்ள பொது கழிப்பறையை, மக்கள் எளிதாக
பயன்படுத்தும் வகையிலும் மற்றும் நவீன முறையில் கட்டணம்
செலுத்துவதற்கு ஏதுவாகவும், க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் பணி
துவங்கியது.
பொது கழிப்பிடத்தை துாய்மையாக பயன்படுத்துமாறு பொது
மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பள்ளப்பட்டி நகராட்சி ஆணையாளர் ஆனந்தகுமார், நகராட்சி பொறியாளர்,
துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து
கொண்டனர்.