துணிக்கடைக்காரரை தாக்கியவர் கைது
பெரியகுளம், செப். 9- பெரியகுளம் ஒன்றியம், கெண்டிக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கனீஸ்வரன் 26. கைலாசபட்டி அருகே
பெரியகுளம் ஒன்றியம், கெண்டிக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் கனீஸ்வரன் 26. கைலாசபட்டி அருகே வேனில் திருப்பூர் துணிகளை விற்று வருகிறார். கைலாசபட்டியைச் சேர்ந்த கமல்நாத் 25. நான்கு நாட்களுக்கு முன்பு ரூ.2 ஆயிரத்துக்கு துணிகள் வாங்கிவிட்டு, ரூ.1,200 கொடுத்துள்ளார். மது போதையில் வந்த கமல்நாத், கனீஸ்வரனிடம் வாங்கிய துணிகளையும், வாங்காத பழைய துணிகளையும் கொடுத்து மாற்றி தருமாறு பிரச்னை செய்தார். இவரது நண்பர்களான நாகராஜபிரபு 27. வீராச்சாமியை 27. மூவரும் சேர்ந்து கனீஸ்வரனை அடித்து காயப்படுத்தினர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் நாகராஜபிரபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.