டயலாக் 2.0..!
``நீ ஸ்கூலுக்குப் போகலைன்னா, ஸ்கூல் இங்க வந்துடும். அப்புறம் சன்டேகூட லீவு இருக்காது, பார்த்துக்கோ...’’ | dialogue 2.0 September 16 2026

(டயலாக் பகுதியில் இடம்பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு தலா ரூ.250 பரிசளிக்கப்படும்)
கோவை காளப்பட்டியிலுள்ள ஒரு வீட்டில் மனைவியும் கணவனும்...
``சட்டசபை நிகழ்வுகளை நான் பார்க்கக் கூடாதுன்னு ஏன் சொல்றீங்க இப்போ..?’’
``இந்த ஒரு மாசமா டெய்லி ஆபீஸ்லருந்து வந்ததும் சண்டையை ஆரம்பிச்சுடுறே... அதுக்கு என்ன காரணம்னு யோசிக்கும்போது, நீ சட்டசபை நிகழ்வுகளை பார்க்குறதுதான்னு தோணிச்சு. அதான், `இனிமே பார்க்காத’ன்னு சொன்னேன்...’’
``சட்டமன்ற நிகழ்வுதான் முடிஞ்சுருச்சே... இனிமே `பிக் பாஸ்’ பார்க்கப்போறேன்...’’
``கிழிஞ்சுது போ!’’
தஞ்சாவூர் தியேட்டருக்கு எதிரேயுள்ள டீக்கடை ஒன்றில்...
``கவனிச்சியா... இப்பல்லாம் தியேட்டருக்குக் கூட்டமே வர்றதில்லை.”
``எப்படி வருவாங்க... `நல்ல காமெடி, விறுவிறுப்பு, சீரியஸ் சீன்ஸ்’னு சட்டசபை அதகளப்படுது. போதாக்குறைக்கு எதிரெதிரே ரெண்டு நடிகர்களும் உட்கார்ந்திருக்காங்க.’’
``அப்போ, இனிமே தியேட்டருக்கு வர்ற கூட்டம் இன்னும் குறைஞ்சிடுமோ?!’’
காஞ்சிபுரம் வீட்டுக்குள் 6 வயது குழந்தையும் தந்தையும்...
``ஸ்கூலுக்குக் கிளம்புடா. அடம் பிடிக்கக் கூடாது சரியா... கிளம்பி வா.’’
``டி.வி-யில அசெம்பிளி பார்க்கணும். நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன் போப்பா.’’
``நீ ஸ்கூலுக்குப் போகலைன்னா, ஸ்கூல் இங்க வந்துடும். அப்புறம் சன்டேகூட லீவு இருக்காது, பார்த்துக்கோ...’’
``நெஜமாவாப்பா சொல்ற... அப்ப நானே ஸ்கூலுக்குப் போயிடுறேன்!’’
குற்றாலம் கட்டணக் கழிப்பறையில்...
``ஒண்ணுக்குப் போறீங்களா... ரெண்டுக்குப் போறீங்களா..?’’
``அது டாய்லெட்டுக்கு உள்ளே போனாதாங்க எனக்குத் தெரியும்!’’
``அப்ப ரெண்டுக்கும் சேர்த்தே காசு குடுத்துட்டுப் போங்க!’’
ஆசிரியர், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.
dialogue@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
