Economy, business and finance
பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் இன்று துவங்குகிறது

திருப்பூர்: இந்திய பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுத்தரும் வகையில், திருப்பூரில், ஐ.கே.எப்., எனப்படும் 'இந்தியா நிட்பேர்' கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 53வது ஐ.கே.எப்., கண்காட்சி, அவிநாசி அருகேயுள்ள ஐ.கே.எ ப்., வளாகத்தில், இன்று துவங்குகிறது.
வரும் 18ம் தேதி வரை, மூன்று நாள் நடக்கும் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு ஆடை உற்பத்தி மையங்களைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள், புதுமையான ஆயத்த ஆடை ரகங்களை காட்சிப்படுத்துகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்பட வெளிநாடுகளின் வணிகர்கள் மற்றும் முகமைகளின் பிரதிநிதிகள் கண்காட்சியில் இடம்பெறும் ஆயத்த ஆடை ரகங்களை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர்.