Lifestyle and human interest
முத்துச்சாமிபுரத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்துசாமிபுரத்தில் ஊராட்சி அலுவலகம் சேதம் அடைந்துள்ளதால் மக்கள், ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்துசாமிபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி அலுவலகத்திற்கு என கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது இங்கு தான் அலுவலகம் செயல்படுகின்றது. இந்நிலையில் கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
கட்டடத்தின் உள்ள கூரையில் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றது. மழைக்காலங்களில் தண்ணீர் கட்டடத்தின் உள்ளே இறங்குவதால் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க முடியவில்லை. தவிர அவ்வப்போது சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுவதால் பணிபுரியும் ஊழியர்கள், வரும் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர். ஆனாலும் வேறு வழியே இன்றி சேதமடைந்த கட்டடத்தில் அலுவலகம் இயங்குகின்றது. எனவே ஊராட்சி அலுவலகத்திற்கு என புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.