Economy, business and finance
கல்லிடைக்குறிச்சி தொழிலதிபரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மகளை டூ - வீலரில் அழைத்து வந்தவரை, பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கண்ணன் 52, அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டபம் நடத்தி வந்தார்.
டியூஷன் சென்றிருந்த மகளை நேற்று இரவு 8:30 மணியளவில் டூ - வீலரில் அழைத்துக் கொண்டு கல்லிடைக்குறிச்சி குத்துக்கல் தெரு பகுதியில் சென்றார்.
அப்போது பின்புறமாக வந்த மர்ம கும்பல் ஒன்று கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதில், படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்கான காரணம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி., விஷ்வேஷ் சாஸ்திரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.