ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
வால்பாறை: வால்பாறை ஸ்ரீநாராயண குரு சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நாராயண குரு சமாஜத்தின் மாநில செயலாளர் கிருஷ்ணாஷ்சுதீர் தலைமை வகித்தார். வால்பாறை தாலுகா தலைவர் ரவி, செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பிரதீப் வரவேற்றார்.
விழாவில், கக்கன்காலனியில் உள்ள ஸ்ரீநாயாணகுரு சன்னதியில் வக்கீல் வினோத் திருக்கொடி ஏற்றினார். தனியார் கலையரங்கில் நடந்த, ஓணம் பண்டிகைய கொண்டாட்டத்தில், குழந்தைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடந்து, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.