அரசு ஊழியர் சங்க மாநாடு
தேனி:தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் முகமது ஆசிக் தலைமை வகித்தார்.
தேனி:தேனியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சென்னமராஜ் முன்னிலை வகித்தார். மேகமலை புலிகள் காப்பக வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், கலெக்டர் அலுவலகம் எதிரே அமைக்கப்படும் ரயில்வே பிளாட்பாரப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அறிவுசார் மையத்திலிருந்து சங்க கட்டடம் வரை ஊர்வலம் சென்றனர். மாவட்ட செயலாளர் விஷ்வநாதன், பொருளாளர் காமேஸ்வரன், துணை தலைவர் சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.