பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் தமிழக கல்வி வளர்ச்சி நிறுவனம் சார்பில் கல்வி மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஒன்றியம் எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செல்வி என்பவருக்கு, நீதிபதி சுரேஷ்குமார் ஆசிரியர் செம்மல் விருது வழங்கினார்.