Politics
ம.தி.மு.க., கூட்டம்
தேனி:தேனியில் ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கடமலை-மயிலை பகுதிகளுக்கு உட்பட்ட மேகமலை பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வைக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாக துவங்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேனி நகர செயலாளர் பெரியகருப்பன், போடி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்தனர்.