Arts, culture, entertainment and media
தீபாவளிக்கு ரூ.5,000 போனஸ் வழங்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொன்னேரி, செப். 17– தீபாவளிக்கு, 5,000 ரூபாய் போனஸ், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
தீபாவளிக்கு, 5,000 ரூபாய் போனஸ், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொன்னேரியில் உள்ள தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் அலுவலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு, 3,000 ரூபாய் மாத ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். 55 வயதிற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வீடு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதியான அனைவருக்கும், காலம் தாழ்த்தாமல் வீடு கட்ட நிதி உதவி வழங்க வேண்டும்.
தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு காலம் கடந்த நிலையில், தற்போதைய அரசாவது வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இது தொடர்பான கோரிக்கை மனுவை, உதவி ஆணையர் அலுவலகத்தில் வழங்கினர்.