இன்று இனிதாக... (16.09.2026) பெங்களூரு
ஆன்மிகம் லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது 4கே புரொஜக் ஷன் மேப்பிங்
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
அஷ்ட பந்தன சரியா மஹா கும்பாபிஷேகம் முன்னிட்டு, மங்கள வாத்தியம், வேத பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, திரவிய ஹோமம் பூர்ணாஹுதி தீபாராதனை, காலை 9 மணி; மூன்றாம் காலை யாக பூஜை, நாடி சந்தானம், திரவிய ஹோமம் பூர்ணாஹுதி தீபாராதனை பிரசாத விநியோகம்- மாலை 6:00 மணி. இடம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், உரிகம் எலக்ட்ரிக்கல் காலனி, தங்கவயல்.
இலவசமாக கோலார் நாராயணா இருதாலயா மருத்துவமனையின் இதயம் பாதிப்பு பரிசோதனை; வாசன் கேர் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ பரிசோதனை, முகாம் - காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை. இடம்: அரசு மருத்துவமனை, ராபர்ட்சன் பேட்டை. விற்பனை, கண்காட்சி
சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.