Lifestyle and human interest
பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
சந்திரா லே - அவுட்: கடனுக்கு வட்டி கொடுக்காததால், பெண்ணை கடத்தி சென்று, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த, இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு சந்திரா லே - அவுட்டில் வசிக்கும் பெண் களான ரேஷ்மா பானு, 35, நஜாத், 36, ஆகியோ ரிடம் இருந்து, 37 வயது பெண் ஒருவர், 5.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். மாதந்தோ றும் வட்டி செலுத்தினார்.
கடந்த ஆறு மாதங்களாக கடன் வாங்கிய பெண், சரியாக வட்டி செலுத்தவில்லை. இதனால் அந்த பெண்ணிற்கும், ரேஷ்மா, நஜாத் இடையே பிரச்னை ஏற்பட்டது.
கடந்த 1ம் தேதி பெண்ணின் வீட்டிற்கு சென்ற ரேஷ்மா, நஜாத் ஆகியோர் தங்கள் நண்பர் சுஹேல், 35, என்பவரின் உதவியுடன், அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றனர்.
கும்பலகோடுவுக்கு கொண்டு சென்று, வீட்டில் வைத்து பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தனர்.
பணம் தராவிட்டால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவோம் என்று மிரட்டினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், கடந்த 2ம் தேதி சந்திரா லே - அவுட் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேஷ்மா, நஜாத், சுஹேலை நேற்று கைது செய்தனர்; விசாரணை நடக்கிறது.