Arts, culture, entertainment and media
தொழிலாளி தற்கொலை
தேவகோட்டை, செப். 17 - தேவகோட்டை பால்காவடியார் வீதியைச் சேர்ந்தவர் கந்தையா மகன் சரவணன். 45., இவரது மனைவி பார்வதி 45.
தேவகோட்டை பால்காவடியார் வீதியைச் சேர்ந்தவர் கந்தையா மகன் சரவணன். 45., இவரது மனைவி பார்வதி 45. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரவணன் சமையல் வேலைக்கு சென்று வந்து உள்ளார். தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள குடும்பத்தினருடன் சண்டை போடுவது வழக்கம். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். வீட்டுக்குள் சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பார்வதி கொடுத்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.