Science and technology
விண்வெளி அறிவியல் மாநாட்டில் மாணவர்கள்
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் மாணவர்கள் மாநில விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கம், திருச்சி ராமன் ஆய்வு அறக்கட்டளை மற்றும் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி சார்பில் சிவகங்கை மண்டல அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு நடந்தது. இதில் சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அறிவியல் சார்ந்த போட்டிகளில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் மூன்றாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள், சுவரொட்டி விளக்க காட்சி தேர்வு செய்யப்பட்டது. இதன் மூலம் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் மாணவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மாணவ மாணவிகளையும் பேராசிரியர் கருணாகரனை முதல்வர் வசந்தி, இயற்பியல் துறை தலைவர் கவிதா வாழ்த்தினர்.