காட்டுப்பாக்கத்தில் நாளை தக்கை பூண்டு வளர்ப்பு பயிற்சி
தக்கை பூண்டு வளர்ப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆர்.திருமாவளவன் கூறியதாவது:
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், தக்கை பூண்டு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி நாளை அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில், டி.ஆர்.ஒய்., – -1 ரக தக்கை பூண்டு விதை தயாரிப்பு, விதை உற்பத்திக்கு தேவையான ஊட்டசத்து, துாய்மை பராமரிப்பு, களை பூச்சி மேலாண், அறுவடை தயாரிப்பு, தரம் பிரிதல், விதை பரிசோதனை உள்ளிட்டவை குறித்து, பல்வேறு விதமான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சி முகாமில், விவசாயிகள், டிப்ளமோ மற்றும் பட்டம் படித்த இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
99405 42371.