Education
வேலை கிடைக்க உதவுகிறது ஆடீஸ் வீதி அறிவு சார் மையம்

கோவை: மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆடிஸ் வீதியில் செயல்பட்டு வரும் நவீன நூலகம் மற்றும் அறிவுசார் மைய உதவியால், ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் அறிவாற்றலை மேம்படுத்த செயல்படுகிறோம். ஒரே நேரத்தில் 100 பேர் உட்கார்ந்து படிக்கும் வசதி, 18,000 புத்தகங்கள், குழந்தைகளுக்கு தனி நூலகம், செய்தித்தாள்கள் வார, மாத இதழ்கள் வாசிப்பதற்கான படிப்பகம் உள்ளது.
சிவில் சர்வீசஸ் பயிற்சிக்கு தனி அறை, 2 ஸ்மார்ட் வகுப்பறை, 15 கணினிகளுடன் டிஜிட்டல் நூலகம் உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஜன. முதல் ஆக. வரை 38,470 பேர் நூலகத்தை பயன்படுத்தியுள்ளனர்.
பயனடைந்த 19 பேர் பல துறைகளில் பணியாற்றுகிறார்கள். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம், ஏ.ஐ. சமூக ஊடக உத்திகள் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி கொடுக்கிறோம். மே முதல் ஆக. வரை 145 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.