Economy, business and finance
விஜய் குறித்து அவதுாறு தொழிலதிபர் கைது
சென்னை: முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட தொழிலதிபரை, சைபர் கிரைம் போலீசார், டில்லியில் கைது செய்தனர்.
முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளத்தில், பிரவீன் கணேசன் என்பவரது பெயரில், கடந்த ஜூன் மாதம் ஒரு பதிவு வெளியானது. பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், பிரவீன் கணேசன், சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதும், சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருவதும் தெரியவந்தது.
அவர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். எனவே, அவருக்கு எதிராக, 'லுக்அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரவீன் கணேசன் ஹாங்காங்கில் இருந்து டில்லி விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். டில்லி விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவரை கைது செய்து, சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.