கரும்பு விலை உயர்வால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை... அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை..!

தருமபுரி மாவட்டத்தில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், கரும்பு விலை உயர்வால் கவலை தெரிவித்துள்ளனர். வறட்சி காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதல் விலைக்கு கரும்புகளை வாங்கி வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், கரும்பு விலை உயர்வால் கவலை தெரிவித்துள்ளனர்.
