நாராயணீய மஹோத்சவ சமிதி மாநில பிரதிநிதிகள் மாநாடு
பாலக்காடு: அகில பாரத நாராயணீய மஹோத்சவ சமிதியின் மாநிலப் பிரதிநிதிகள் மாநாடு, வரும் 20ம் தேதி பாலக்காட்டில் நடக்கிறது. புதுச்சேரி என்.எஸ்.எஸ்., மண்டபத்தில், ஸ்ரீமத் நாராயணீயம் பாராயணத்துடன் மாநாடு துவங்குகிறது. தொடர்ந்து, பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.
பாலக்காடு சின்மயா மிஷன் மடாதிபதி பூஜ்ய சுவாமி அசேஷானந்த சரஸ்வதி மாநாட்டை துவக்கி வைக்கிறார். மஹாமண்டலேஸ்வர் பூஜ்ய சுவாமி பிரபாகரானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்க, அகில இந்தியத் துணைத் தலைவர் மோகனன் தலைமை வகிக்கிறார்.
மாநாட்டில், அகில இந்திய துணைத்தலைவர்கள் பெரிங்கர கேசவன் நம்பூதிரி, பாபு பணிக்கர், மத்திய, மாநில நிர்வாகிகள் முன்னின்று வழிநடத்துகின்றனர். இத்தகவலை, அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஹரி மேனன், மாநிலச் செயலாளர் செந்தாமராக் ஷன், வட கேரள தலைவர் சதீஷ் மேனன் தெரிவித்தனர்.