லோக்அதாலத் விசாரணை சிறப்பு அமர்வில் 5,000 வழக்கு
கோவை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய ‘லோக்அதாலத்’ விசாரணை, கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் மற்றும் அன்னுார் நீதிமன்ற வளாகங்களில் நடந்து வருகிறது.
கோர்ட்டில் நிலுவையிலுள்ள சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, குடும்ப நலன் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாயம் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.
மாவட்ட நீதிபதிகள் தலைமையில், ஆக., 3 முதல் சிறப்பு அமர்வு துவங்கப்பட்டு சமரச முயற்சிகள் நடக்கின்றன. இந்த அமர்வில் நேற்று வரை 5,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.