Politics
வள்ளலார் பள்ளியில் முப்பெரும் விழா
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில், ஆசிரியர் தின விழா, கலெக்டரிடம் சான்று பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், சக்கரவர்த்தி, குசேலன், மதியழகன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்தார்.
கலெக்டரிடம் சான்று பெற்ற வருவாய் ஆய்வாளர் திவ்யா, வடசெட்டியந்தல் பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், அரிமா மாவட்ட தலைவர் வேலு, இன்னர்வீல் கிளப் தலைவி, கீதாமுருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அன்பழகன், குணசேகரன், அருளப்பன், திருக்குறள் பேரவைச் செயலாளர் லட்சுமிபதி, தீபா சுகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வூதியர் சங்க பொருளாளர் ராஜேந்திரன் பரிசு வழங்கினார்.
தங்கமணி நன்றி கூறினார்.
