Arts, culture, entertainment and media
கையில் புத்தகத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை கீர்த்தி ஷெட்டி
திருப்பதி,திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்ப

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் திருப்பதிக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி ஷெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பிறகு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்களைப் பெற்றார். தொடர்ந்து அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தரிசனம் முடிந்து வெளியே வந்த கீர்த்தி ஷெட்டியுடன் பக்தர்கள் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது கீர்த்தி ஷெட்டி தனது கையில் புத்தகம் ஒன்றை வைத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த புத்தகம் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.