மிக்கேல் அதிதூதர் சர்ச்சில் கொடியேற்றம்
திருப்பாச்சேத்தி, செப்.18-– திருப்பாச்சேத்தி அருகே மிக்கேல்பட்டிணம் மிக்கேல் அதிதூதர் சர்ச் திருவிழா இன்று
திருப்பாச்சேத்தி அருகே மிக்கேல்பட்டிணம் மிக்கேல் அதிதூதர் சர்ச் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவிழா கொடியினை பாம்பன் பாதிரியார் ஜான்பிரிட்டோ ஏற்றிவைக்கிறார். தினமும் மாலை 6:30 மணிக்கு நவநாள், சிறப்பு திருப்பலி நடைபெறும். செப்., 26 அன்று மாலை 6:30 மணிக்கு கூட்டு திருப்பலி பாதிரியார் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும். அன்று இரவு மரியாள், இருதய ஆண்டவர் மின்னொளி தேர்பவனி நடைபெறும். செப்., 27 அன்று காலை 8:00 மணிக்கு மதுரை உயர் மறை மாவட்ட பொருளாளர் அடைக்கல ராஜா தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெறும். செப்., 28 காலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும். மிக்கேல்பட்டிணம் சர்ச் பாதிரியார் ஜேம்ஸ் தலைமையில் விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.