அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு
தர்மபுரி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்-தது. மாநில தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட செயலாளர் தெய்-வானை, பொருளாளர் ஜெயவேல் உட்பட மாநில நிர்வாகிகள் பலர் பேசினர்.
தமிழக அரசு நீண்ட ஆண்டு காலமாக நிறை-வேற்றப்படாமல் உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சத்து-ணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பஞ்., செயலாளர்கள், கிராம ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்
படுத்த வேண்டும். தொகுப்பூதியம் சிறப்பு கால-முறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்-பூதிய முறையை ஒழித்து, நிரந்த பணியிடங்க-ளாக நிரப்ப வேண்டும். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளை-ஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன.