Arts, culture, entertainment and media
மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துாய்மை பணியாளர்களுக்கு பரிந்துரை செய்யப்-பட்ட ஊதியம், 760 ரூபாய் வழங்க வேண்டும். வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை விடுமுறை வழங்க வேண்டும், பி.எப்., - இ.எஸ்.ஐ., அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி, கரூர் மாநகராட்சி அலுவ-லக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் சிறிது நேரம் காத்திரருப்பு போராட்டம் நடத்தினர். இதில், கரூர் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர் அமைப்பு சார்பில், பொரு-ளாளர் கருணாநிதி (சி.ஐ.டி.யு.,) தலைமையில், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியா-ளர்கள் பங்கேற்றனர். ?????, பிறகு, கரூர் மாநக-ராட்சி அலுவலகத்தில் இருந்து, துாய்மை பணி-யாளர்கள் லைட்ஹவுஸ் கார்னர் வரை, ஊர்வல-மாக சென்றனர்.தொடர்ந்து, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், துாய்மை பணியா-ளர்கள் கோரிக்கை மனுவை அளித்து விட்டு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே, சிறிது நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்-டனர். இந்நிலையில் நேற்றிரவு மாநகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.