கூழாங்கல் கடத்திய லாரி டிரைவர் கைது
வேப்பூர், செப். 12- கூழாங்கல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். கனிம வளம் மற்றும் புவியியல் சுரங்கத்துறை
கூழாங்கல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கனிம வளம் மற்றும் புவியியல் சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வேப்பூரில் திருச்சி மார்க்க சர்வீஸ் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த (டி.என். 40 எப் 0573) பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். அதில், விருத்தாசலம் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன்,31; என்பதும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி செல்வது தெரிந்தது. தொடர்ந்து, லாரியை பறிமுதல் செய்து டிரைவர் செந்தூர்பாண்டியனை வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து செந்தூர்பாண்டியனை கைது செய்தனர்.