ராணுவ வீரர்கள் 25 பேர் பாகிஸ்தானில் கொலை
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பலுாச் விடுதலை படையினர் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களில், அந்நாட்டு ராணுவத்தினர், 25 பேர் கொல்லப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பல ஆண்டுகளாக சுதந்திரம் கோரி போராட்டம் வெடித்து வருகிறது. பாக்., ராணுவத்தின் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, பி.எல்.ஏ., எனப்படும் பலுாச் விடுதலைப்படை நீண்ட காலமாக போராடி வருகிறது.
இந்நிலையில், ஜியாரத் கிராஸ் பகுதியில் ராணுவ வாகனப் பேரணியை குறிவைத்து, பி.எல்.ஏ., படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; இரண்டு வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகின. சுராப் பகுதியில் உள்ள ஹஜிகா என்ற இடத்தில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், மேலும் ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.