Politics
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
புதுச்சேரி: இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நியாயமான முறையிலும் அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், மாதிரி நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை சரிபார்க்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பாக பொது, காவல் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளராக கொர்ரிலா சுவர்ண பாண்டா தாஸ் (94430 45832), காவல் பார்வையாளராக ஓம் பிரகாஷ் திரிபாதி (94890 35834) மற்றும் செலவினப் பார்வையாளராக யுவராஜ் மாலிக் (94430 95833) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தொடர்பான புகார்கள் அல்லது குறைகள் ஏதேனும் இருப்பின், பார்வையாளர்களைத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரிலோ அனுகலாம்.
பார்வையாளர்களை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் வளாகத் தபால் அலுவலகச் சாலையில் அமைந்துள்ள ஜிப்மர் விருந்தினர் இல்லம்–2ல் தினமும் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை நேரில் சந்திக்கலாம். மேலும் observerofficepdy2026@gmail.com என்ற இ–மெயில் முகவரி வழியாகவும் தொடர்புகொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.