சின்னதுகவூரில் அங்கன்வாடி கட்டடம் சேதம்
இளையான்குடி, செப்.6-– இளையான்குடி அருகே சின்ன துகவூரில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்தும், குடிநீர்
இளையான்குடி அருகே சின்ன துகவூரில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்தும், குடிநீர் வசதியின்றி குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், துகவூர் ஊராட்சி சின்னதுகவூரில் அங்கன்வாடி மையத்தில் கிராமப்புற குழந்தைகள் படிக்கின்றனர். இக்கட்டடத்தில் உள்ள கழிப்பறை மிகவும் சேதமடைந்த நிலையில் செடி,கொடிகள் முளைத்து குழந்தைகள் உள்ளே சென்று கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் அங்கன்வாடி மைய கட்டடத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தைகள் தவிக்கின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.