Politics
தீபாவளி தள்ளுபடி விற்பனை கோ–ஆப்டெக்ஸில் துவக்கம்

கோவை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோ–ஆப்டெக்ஸ் கடைகளில், 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம், சேலம், கோவை மென்பட்டு சேலை, ஆரணி, தஞ்சாவூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், புதிய டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
பட்டு சேலைகள் மட்டுமின்றி பிரிண்டட் சட்டை, குர்த்தி, ஸ்ட்ரெய்ட் பேன்ட்ஸ், பலாசோ பேன்ட்ஸ் கிராப் டாப், கோத்தகிரி பேன்ட்ஸ் கிராப் டாட் மற்றும் சிறுமிகளுக்கு பட்டு பாவாடை சட்டை, காட்டன் சேலைகள், நைட்டிகள், என ஏராளமான ரகங்கள் உள்ளன. அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கடன் வசதியுள்ளது.
சிறப்பு தள்ளுபடி விற்பனையை, அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார். கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, கோ–ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாய்பாபா காலனி மற்றும் காந்திபுரம், மருதம் விற்பனை நிலையங்களில், பழைய, கிழிந்த துணிகளை கொடுத்து, புதியதை வாங்கி கொள்ளலாம்.




