Sport
கல்லுாரிகளிடையே கிரிக்கெட் போட்டி
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் டிரஸ்ட் மற்றும் செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். போட்டிகளில் அழகப்பா பல்கலை 12 இணைப்பு கல்லுாரிகளின் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் இறுதியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி முதலிடம், காரைக்குடி அழகப்பா பல்கலை இரண்டமிடத்தையும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி மூன்றாமிடத்தையும், கீழக்கரை செய்யது ஹமிதா கல்லுாரி நான்காவது இடத்தையும் பிடித்தது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ் குமார் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம், பேராசிரியர்கள் சந்திரசேகர், சேசுதுரை, காசிக்குமார், சுரேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.