Lifestyle and human interest
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்!

உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நகரமான மான்செஸ்டர், முதல் தொழில் நகரம் என்று அறியப்படுகிறது. இது 19 ஆம் நூற்றாண்டின் ஜவுளிப் புரட்சிக்கு வழிவகுத்த நகரம் என்றும் அறியப்படுகிறது. இது 'காட்டனோபோலிஸ்' (பருத்தி நகரம்) என்றும் அழைக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் மான்செஸ்டர் என்ற பெயரிலும் அழைக்கப்படும் ஒரு நகரம் உள்ளது. அது எந்த நகரம் என்று உங்களுக்குத் தெரியுமா? அதற்கு இந்தப் பெயர் ஏன் வந்தது? இதோ அதைப் பற்றிய சில தகவல்கள்...
குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத், 'இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பருத்தி உற்பத்தியில் இந்த நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜவுளி உற்பத்தில் முன்னணி வகிப்பதால் இந்த நகரம் 'இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படுகிறது. அகமதாபாத் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், 2017-ஆம் ஆண்டில், உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய நகரம் இதுவாகும். இது இந்தியாவின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.
