தமிழகத்திலேயே எங்கும் இல்லாதவகையில் “ஒரு ரூபாய்க்கு ஒரு டீ' விற்பனை..!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய்க்கு ஒரு டீ வழங்கி வாடிக்கையாளர்களின் பாராட்டை குன்னத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கீதா தங்கராஜ் என்பவர் பெற்றுள்ளார்.
கையில் காசு இல்லாதவர்கள், யாரிடமும் கையேந்தாமல் டீ குடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.