Sport
பார்சிலோனாவில் மெஸ்ஸியின் குறுகிய கால சாதனையை முறியடித்த ரபீனியா!

பார்சிலோனா கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரபீனியா குறித்து...
பார்சிலோனா கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸியின் குறுகிய கால சாதனையை கேப்டன் ரபீனியா முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரபீனியா பார்சிலோனா கிளப்பில் முதன்மையான கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை7 போட்டிகளில் 11 கோல்கள் 3 அசிஸ்ட்டுகளை வழங்கி அற்புதமாக விளையாடி வருகிறார்.
முன்னதாக லியோனல் மெஸ்ஸி 2012/13 சீசனில் முதல் ஏழு போட்டிகளில் 10 கோல்கள் அடித்திருந்தார். ரபீனியா தற்போது 11 கோல்கள் அடித்து மெஸ்ஸியை முந்தியுள்ளார்.
அந்த சீசனின் முடிவில் மெஸ்ஸி 60 கோல்கள் அடித்திருந்தார். ரபீனியா இந்த சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லா லிகா கால்பந்துத் தொடரில் ரபீனியா அசத்தலால் 7-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டிக்கு முன்பாக ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான விருது ரபீனியாவுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் ரபீனியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
பேலந்தோர் போட்டியில் இவரது பெயர் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சீசனில் இவருக்கு கொடுக்கப்படாததும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது கவனிக்கத்தக்கது.
இந்த சீசனில் பார்சிலோனா இதுவரை 7 போட்டிகளில் 33 கோல்கள் அடித்துள்ளது. அனைத்து போட்டிகளிலும் வென்று 100 சதவிகித வெற்றி சதவிகிதத்தைப் பெற்றுள்ளது.
Raphinha surpasses leo messi record for aeson start at Barcelona
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.