சுற்றுச்சூழலை பாதிக்காத வழிபாடு..! சுசீந்திரத்தில் 40 கிலோ நெல்மணிகளால் உருவான நெல்மணி விநாயகர்..!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 40 கிலோ நெல்மணிகளைக் கொண்டு விநாயகர் சிலை உருவாக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அக்கரை பகுதியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 40 கிலோ நெல்மணிகளைக் கொண்டு விநாயகர் சிலை ஒன்று உருவாக்கப்பட்டது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நெல்மணி விநாயகர் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
