லாரி உரிமையாளர்கள், முகவர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
புதுச்சேரி: பாண்டிச்சேரி கூட்ஸ் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் கனரக ஊர்திகள் முனையம் வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த விழாவில், சங்கத்தின் புதிய தலைவராக சக்திவேல் பட்டுரோஸ், பொதுச் செயலாளராக கந்தசாமி, பொருளாளராக அசோக், துணைத் தலைவராக முத்துவேல், இணைச் செயலாளர்களாக சக்திவேல், ஜவஹர் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.
முன்னாள் தலைவர் அன்புச்செழியன் புதிய நிர்வாகிகளிடம் கணக்கு புத்தகங்களை வழங்கி பொறுப்பினை ஒப்படைத்தார். கவுரவத் தலைவர் ஜெயராமன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கடந்த 28 ஆண்டுகளாக சரக்கு போக்குவரத்து துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வரும் பாண்டிச்சேரி கூட்ஸ் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கம், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்., உடன் இணைக்கப்பட்ட பழமையான சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.