ஏரி சாலையில் தடுப்பு வேலி அமைக்கப்படுமா?
மல்லசமுத்திரம்; 'கட்டிப்பாளையம் ஏரி சாலையின் இருபுறமும், தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
மல்லசமுத்திரம் யூனியன், மாமுண்டி அக்ர-ஹாரம் பஞ்., கட்டிப்பாளையம் ஏரி சாலை வழி-யாக தினமும் சவுரிபாளையம், மதியம்பட்டி, சர்க்கார் மாமுண்டி, வெண்ணந்துார், ஆட்டை-யாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு, மக்கள் தினந்-தோறும் சென்று வருகின்றனர். இதுவரை ஏரி சாலையில் தடுப்பு வேலிகள் எதுவும் அமைக்க-வில்லை. குறிப்பாக, இந்த சாலை குறுகலாக உள்-ளதால் எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் ஒதுங்கி செல்ல வழியின்றி, சாலையோரம் தவறி விழ வாய்ப்புள்ளது. சாலையோரம், 20 அடிக்கும் அதிகமாக பள்ளம் உள்ளதால், தவறி விழும்போது உயிர்பலி கூட நேரலாம். எனவே, சாலையின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.