ரூ.2.58 கோடியில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடங்கள் பயன்பாடின்றி சிதிலமடையும் அவலம்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட போதிலும், இந்த கட்டடம் இதுவரை பயன்பாட்டிற்கு வராததால் மாணவ, மாணவிகள் பழைய இடத்திலேயே இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதிக் குறைபாடுகளுக்கு மத்தியில் தொடர்ந்து பாடம் கற்கும் சூழல் நீடிக்கிறது.