கீழக்கரை பேர்ல் பள்ளியில் இன்டராக்ட் கிளப் துவக்கம்

கீழக்கரை: கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்டராக்ட் கிளப் துவக்க விழா நடந்தது.
நடப்பாண்டிற்கான புதிய தலைவராக அகமது ஹபீஸ், செயலாளராக முஹமத் அப்துல் மனஸ் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சித்திரை வேலு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஷாநவாஸ் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி சங்க மாவட்ட கற்றல் ஒருங்கிணைப்பாளர் சண்முக ராஜேஸ்வரன், துணை கவர்னர் சுல்தான் சம்சுல் கபீர், சங்க செயலாளர் சபீர், பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ராசிக்தீன், சுந்தரம், சர்புதீன், அலாவுதீன் மற்றும் இன்டராக்ட் அட்வைசர் சுதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வஸ்தா குமாரி நன்றி கூறினார்.